சந்தனத்தை பயன்படுத்தி முகத்தை எவ்வாறு அழகுபடுத்தலாம்!

பெண்கள் அனைவரும் விரும்பும் ஒரு விஷயம் முகம் பொலிவுடனும், அழகுடனும் இருக்க வேண்டும் என்பது தான். இதற்காக ஏதாவது அழகு பொருள்களை கொண்டு முகத்தை அழகு படுத்தி கொண்டே தான் இருக்கின்றனர். எனவே இந்த பதிவில் சந்தனத்தை பயன்படுத்தி முகத்தை அழகுபடுத்த உதவும் பல்வேறு பேஸ் பேக்குகளை குறித்து பார்க்கலாம்.

மஞ்சள் தூள்
ஒரு துளி எலுமிச்சை சாறு, சந்தனப் பொடி, மஞ்சள் தூள், மற்றும் பால் ஊற்றி நன்கு கலந்து சருமத்தில் தடவி அரை மணி நேரம் வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் முகத்தில் பொலிவு உண்டாகும்.

முட்டை மற்றும் தேன்
சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்க வேண்டுமானால் முட்டை, தேன் மற்றும் சந்தனப் பொடியை நன்கு கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, அழுக்குகள் அனைத்தும் வெளியேறும். இதனால் சருமம் அழகாக இளமையாக மாறும்.

எலுமிச்சை சாறு
சருமத்தில் உள்ள இறந்த செல்களை போக்க எலுமிச்சை சாற்றுடன் சந்தனப் பொடியை சேர்த்து நன்கு கலந்து, உங்கள் முகத்திற்கு பேஸ் மாஸ்க் போட்டால் இறந்த செல்கள் நீங்குவதோடு பருக்கள் வராமலும் தடுக்கலாம்.

முல்தானி மெட்டி
1/2 ஸ்பூன் சந்தனப் பொடி மற்றும் 1/2 ஸ்பூன் முல்தானி மெட்டி பொடி ஆகிய இரண்டையும் சேர்த்து அதில் தயிர் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகம் பொலிவுடன் மாறும்.

தயிர்
தயிர் பலவிதமான அழகு பொருள்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது ஒரு சிறந்த கிளின்சர் என்று சொல்லலாம். எனவே அந்த தயிரை சந்தனப் பொடியில் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் சருமம் மென்மையாவதோடு, வெள்ளையாகவும் மாறும்.