நெயில் பாலிஷ் போட்டதும் உடனே காய வைப்பது எப்படி ?

நகத்தை அழகுப்படுத்த பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் நெயில் பாலிஷ். பெண்கள் தங்கள் நகங்களை அழகுப்படுத்த தனி கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது பல நிறங்களில் நெயில் பாலிஷ் கிடைப்பதனால் பெண்கள் தங்கள் அணியும் ஆடையின் நிறத்திற்கேற்ப அவற்றை வைத்து வருகின்றனர். இந்த நெயில் பாலிஷ் வைத்ததும் அதை சிறிது நேரம் அப்படியே வைத்திருந்தால்தான் காய்ந்து நகங்களில் ஒட்டிக்கொள்ளும்

சிலருக்கு அவ்வளவு நேரம் அமர்ந்து இருக்கும் அளவுக்கு பொறுமை இருக்காது. அவர்களுக்காக நெயில் பாலிஷ் போட்டதும் உடனே காய வைப்பது எப்படி ? நெயில் பாலிஷ் வைத்ததும் அதன் மேல் தேங்காய் எண்ணெய் அல்லது வீட்டில் இருக்கும் ஏதாவது எண்ணெயை தடவி வைத்து பாருங்கள். நெயில் பாலிஷ் உடனே எண்ணெயை உறிஞ்சி காய்ந்துவிடும்.

நெயில் பாலிஷ் வைத்ததும் குளுர்ச்சியான நீரில் விரல்களை முக்கி எடுத்தால் உடனே காய்ந்துவிடும். சிலருக்கு முடி காய ஹேர் ஸ்பிரே பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் நெயில் பாலிஷ் வைத்துவிட்டு விரல்களில் ஸ்பிரே செய்யுங்கள். அந்த நொடியிலே நெயில் பாலிஷ் காய்ந்துவிடும்.

டேபில் ஃபேன் அல்லது ஹேர் டிரையர் இருந்தால் நெயில் பாலிஷ் வைத்து விட்டு காற்று படும்படி விரல்களை வைக்க விரைவில் காய்ந்துவிடும். இந்த எளிமையான முறைகள் மூலம், பெண்கள் தங்களது நகங்களில் அழகான நெயில் பாலிஷ் வடிவமைப்பை பெறலாம்.