ஆண்களே...உங்கள் தாடியை வேகமாக வளர வைக்க சில பயனுள்ள குறிப்புகள்!

ஆண்களின் முக அழகில் தாடி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பல ஆண்களுக்கு தாடி சீக்கிரமாக வளருவதில்லை. இதற்காக வேதி பொருட்கள் கொண்ட கிரீம்களை உபயோகிப்பது சருமத்திற்கு தீங்கு விளைவிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, நாம் தினமும் சாப்பிட கூடிய சில உணவுகள் தாடியின் முடியை வேகமாக வளர வழி செய்யும். தாடியை வேகமாக வளர வைக்கும் 6 உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க!

முட்டை
தாடி முடியை சிறப்பாக வளர வைக்க முட்டை சிறந்த உணவாக இருக்கும். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டெரோனின் அளவு சீராக இருந்தாலே தாடி அழகாக வளரும். முட்டை சாப்பிட்டு வருவதால் இவை டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோனை அதிக அளவில் உற்பத்தி செய்து தாடி முடியை கிடக்கிடவென வளர செய்து விடும்.

ஆரஞ்ச்
வைட்டமின் சி இயற்கையிலே இந்த பழத்தில் அதிக அளவில் இருப்பதால் தாடியின் முடி வளர்ச்சி அதிகரிக்கும். தாடி வளராமல் அவதிப்படுவோருக்கு இந்த ஆரஞ்சு பழம் சிறந்த முறையில் உதவும். தினமும் ஆரஞ்சை சாப்பிட்டு வந்தாலே ஆண்கள் செழிப்பான தாடியுடன் காட்சி தருவீர்கள்.

உருளைக்கிழங்கு
சாப்பிட கூடிய உணவில் உருளைக்கிழங்கை சேர்த்து கொண்டால் அவை டெஸ்டோஸ்டெரோனின் உற்பத்தியை அதிகரித்து விடும். காரணம் இதிலுள்ள கார்ப்ஸ் தான். தினமும் கொஞ்சம் உருளைக்கிழங்கை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாடியின் முடி சீக்கிரமாக வளரும்.

உலர் திராட்சைகள்
போரான் என்கிற முக்கிய மூல பொருள் உலர் திராட்சையில் அதிக அளவில் உள்ளது. இது தாடியின் வளர்ச்சிக்கு உதவும். ஆனால், இது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலர் திராட்சை சாப்பிட்டு வரவதால் டெஸ்டோஸ்டெரோன் அளவு உயர்ந்து, தாடி நன்றாக வளரும்.

ஆலிவ் எண்ணெய்
சமைக்கும் உணவில் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து கொண்டால் பல்வேறு உடலுக்கான நன்மைகள் கிடைக்கும். அதில் இதுவும் ஒன்று. ஆலிவ் எண்ணெய் தாடியின் முடியை கொழுகொழுவென வளர்க்கும் ஆற்றல் கொண்டது. இதை தாடியில் தடவியும் வரலாம்.

காளான்
எல்லாவித காளான் வகைகளும் உடலுக்கு நல்லதல்ல. அந்த வகையில் வெள்ளை கால்களை கொண்ட காளானை சமைத்து சாப்பிட்டு வந்தால் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை குறைத்து டெஸ்டோஸ்டெரோனை அதிகரித்து விடும். இதனால் உங்களின் தாடி முடியும் சிறப்பாக வளரும்.