இயற்கையான முறையில் அழகை பராமரிப்பது எப்படி?

இன்றுய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் மற்றும் ஆண்கள் பல்வேறு விதமான சூழ்நிலைக்கு மத்தியில் தங்களது பணிகளை மேற்கொண்டும் வருகின்றனர். இந்தசூழலில் பெண்கள் மற்றும் ஆண்கள் அவர்களின் அழகை பராமரிக்க நினைப்பது வழக்கம். தங்களின் முக அழகை பராமரிப்பதற்கு அதிகளவு ஆர்வத்தை பெண்கள் மற்றும் ஆண்களுக்கு கொண்டிருக்கின்றனர். அவர்கள் இயற்கையான முறையில் தங்களின் அழகை பராமரிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

தேவையானவை
எலுமிச்சை சாறு – அரை தே.கரண்டி
முட்டையின் வெள்ளைக் கரு- 1 எண்ணம்
தேங்காய் எண்ணெய் – 1 1/2 தே.கரண்டி
தேன் – அரை தே.கரண்டி

செய்முறை
முதலில் எடுத்துக்கொண்ட முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக பிரித்தெடுத்து, நுரை பொங்கும் அளவிற்கு அடித்து எடுக்கவும். பின்னர் அந்த முட்டையுடன் தேன், எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து முகத்தில் தடவ வேண்டும்.

இந்த கலவையை முகத்தில் தடவுவதற்கு முன்னதாக உங்கள் முகத்தை கழுவ வேண்டும் பின்பு சுத்தமான காட்டன் துணியால் துடைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் தயார் செய்த கலவையை முகத்தில் தேய்த்து சுமார் 30 நிமிடங்கள் கழித்த பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமமானது மிருதுவடைந்து, முகம் பளபளப்பாக மாறும்.