முகத்தை பளபள வைக்கும் பேஸ் பேக் தயாரிப்பது எப்படி?

முகத்தை அழகுப்படுத்துவதற்காக பலரும் காய்கறி வகைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மிகவும் அதிகமாக வெள்ளரிக்காய் பயன்படுகிறது. இது அழகிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கு பலவிதமான நன்மைகளை வழங்குகிறது. குளிர்ச்சி அதிகம் நிறைந்த வெள்ளரிக்காய் நம் உடலிலிருந்து தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுகிறது.

இதில் அதிக அளவில் நீர்ச்சத்து மட்டுமே உள்ளது. மேலும் தோலை பராமரிப்பதில் மிகவும் முக்கியம் வாய்ந்த பொருளாக வேப்பிலை உள்ளது. இந்த வேப்பிலை மற்றும் வெள்ளரிக்காயுடன் மஞ்சள், ஓட்ஸ் கலந்து முகத்தை பளபள வைக்கும் பேஸ் பேக் எப்படி தயாரிப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
வேப்பிலை – சிறிதளவு
வெள்ளரி – பாதி
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
ஓட்ஸ் – இரண்டு ஸ்பூன்

செய்முறை
முதலாவது வேப்பிலையை நன்கு கழுவி அதனுடன் வெள்ளரிக்காய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் எடுத்து தனியாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த ஓட்சுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

அதன்பின் அரைத்து வைத்திருக்கும் வெள்ளரிக்காய் கலவையை மஞ்சள் மற்றும் ஓட்சுடன் கலந்து அதனை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து 20 நிமிடங்கள் கழித்து தடவி வந்தால், உங்கள் முகம் பளபளப்பாக மாறும். இதனை வாரத்தில் மூன்று நாள்கள் செய்து வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.