குளிர்காலத்தில் சரும பொலிவை பாதுகாக்க வெண்ணெய் தயாரிக்கும் முறை

சென்னை: குளிர்காலத்தில் சருமத்தை பொலிவாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க 3 பொருட்களைக் கொண்டு வெண்ணெய் தயாரிக்கும் முறையைப் பற்றி பார்க்கலாம்

நமது சருமம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் எப்போதும் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் குளிர்காலத்தில் சருமம் வறண்டு ஏற்ற இறக்கங்களை சந்திக்கிறது. சந்தையில் விற்க்கப்படும் பொருட்கள் நம் சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகின்றன ஆனால் அவற்றின் விளைவு நீண்ட நேரம் நீடிக்காது.

உடம்பில் பயன்படுத்தக்கூடிய வெண்ணெய் வீட்டிலேயே தயாரிக்கும் முறையைப் பற்றி பார்க்கலாம். உடல் வெண்ணெய் நம் உடலை ஆழமாக ஈரப்பதமாக்குகிறது மற்றும் ஈரப்பதத்தை நீண்ட நேரம் பூட்டுகிறது. வீட்டிலேயே உடம்புக்கு வெண்ணெய் தயாரிக்கும் முறையை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்ஷியா வெண்ணெய் - 1/2 கப்தேங்காய் எண்ணெய் - 1/4 கப்பாதாம் எண்ணெய் - 1/4 கப்

செய்முறை: மூன்று பொருட்களையும் ஒரு கடாயில் போட்டு சிறிய தீயில் சூடாக்கி உருகவும். பின் ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும் தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ளலாம்.