இயற்கை ஷாம்புவை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் மிகவும் அழகு சேர்ப்பது முடி. இந்த முடியை பராமரிக்க பலரும் தங்கள் கையில் கிடைக்க கூடிய ஷாம்பு வகைகளை எல்லாம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் செயற்கை ஷாம்பு வகைகளை பயன்படுத்துவதை பார்க்கிலும் இயற்கையான ஷாம்பு மிகவும் சிறந்தது. இந்த இயற்கை ஷாம்புவை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
வெந்தயம் – அரை கப்
சிகைக்காய் – 1 கப்
பூந்திகொட்டை – 150 கிராம்
நெல்லி முள்ளி – அரை கப்

தயாரிக்கும் முறை
பூந்திக்கொட்டை, வெந்தயம், சிகைக்காய், நெல்லி முள்ளி ஆகிய நான்கையும் இரவு முழுவதும் ஊறவைத்து விடுங்கள். அடுத்தநாள் ஊறவைத்த பாத்திரத்திலிருந்து பெரிய வாயகன்ற பாத்திரத்தில் மாற்றி அனைத்தையும் ஒன்றாக்கி வையுங்கள்.

அதன் பிறகு இவைகளை சிறு தீயில் வைத்து நன்றாக அழுத்தி கொடுத்து அதை வேகவிடுங்கள். அதனை கரண்டி கொண்டு கலக்கும் போதே நுரைத்து பொங்கும். எனினும் நன்கு காயும் போது சிகைக்காய், வெந்தயம், நெல்லி முள்ளி போன்றவை மசிய தொடங்கும். மசிந்த பிறகு வைத்த நீர் நான்கில் ஒரு பாகமாக சுண்டும் வரை காய்ச்சி இறக்கி ஆறவிடுங்கள்.

சில மணி நேரம் கழித்து பார்த்தால் கலவை அடியில் தங்கியிருக்கும். மேலாக வடிகட்டி பாட்டிலில் ஊற்றி விடுங்கள். இப்போது ஆர்கானிக் ஷாம்பு ரெடி. மீதம் இருக்கும் கலவையை மேலும் கையால் மசித்து பிழிந்து வெளியேற்றுங்கள். இந்த ஆர்கானிக் ஷாம்புவை இரண்டு மாதங்கள் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். இதனை ஒரு மாதம் பயன்படுத்தினாலே முடியில் நல்ல ஒரு மாற்றத்தை உணரலாம்.