அழகை கெடுக்கும் தேமலை இயற்கை முறையில் சரி செய்வது எப்படி?

சிலருக்கு முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தேமல் வந்து அழகை கெடுத்து விடுகிறது. இதற்கு நம் வீடுகளில் பயன்படுத்தும் சில பொருள்களே போதுமானது. எந்தெந்த பொருள்களை பயன்படுத்தி சரி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

​பழத்தோல்
ஆரஞ்சு பழத்தோல் மற்றும் எலுமிச்சை பழத்தோல் ஆகியவற்றை நன்கு காயவைத்து பொடி செய்து கொள்ளுங்கள். இந்த பொடியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து தேமல் இருக்கும் பகுதியில் தடவி வந்தால் தேமல் எளிதில் மறையும்.

புடலங்காய்
புடலங்காய் மிகவும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறி. இதனை நறுக்கி உள்பகுதியில் இருப்பதை எடுத்துவிட்டு அதன் உள்ளே கற்றாழை ஜெல் மற்றும் கடுக்காய் பொடி இரண்டையும் அரைத்து ஊறவிடவும். அடுத்தநாள் காலையில் இதை எடுத்து தேமல் இருக்கும் பகுதியில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

முள்ளங்கி
முள்ளங்கி குளிர்ச்சி நிறைந்த பொருள். முள்ளங்கியை தோல் எடுத்து துண்டுகளாக நறுக்கி மோரில் ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து இதை நன்கு அரைத்து தேமல் இருக்கும் இடங்களில் நன்கு தடவி விட வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

துளசி
உடல் முழுக்க தேமல் இருந்தால் துளசி இலைகளுடன் சுக்கை வைத்து நசுக்கி தேமல் இருக்கும் இடத்தில் பற்று போட தேமல் குறையும். துளசியைப் போன்று வேப்பிலையையும் கூட பயன்படுத்தலாம். தேமலை அதிகப்படுத்தும் கிருமிகள் நீங்ககூடும்.