எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு

எண்ணெய்ப்பசை சருமம் உடையவர்கள் வெளியில் செல்லும் போது, மேலும் அந்த எண்ணெய் பசை தன்மை சருமத்தில் அதிகரித்து விடும். இன்றைக்கு இந்த பதிவில் எண்ணெய் பசை சருமத்தை உடையவர்கள் பளபளப்பான சருமத்தை பெறுவதற்கான வழிகளை தெரிந்துகொள்வோம்.

வெள்ளரிக்காய்
எண்ணெய் பசை சருமம் உடையவர்கள், வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர, சருமத்தில் எண்ணெய் வடிவது தடுக்கப்படுகிறது. மேலும், வெள்ளரிச்சாற்றுடன், சிறிது பால்பவுடர் கலந்து முகத்தில் பூசி வந்தால், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக இருக்கும்.

தக்காளி
எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தக்காளி பலத்தை நன்கு பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது தடுக்கப்படும். மேலும், தக்காளியுடன் வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் கலந்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால், முகத்தில் எண்ணெய் வடிவது தடுக்கப்படும்.

மோர்
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும். வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சை பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், எண்ணெய் வழிவது குறையும்.

கடலைமாவு
எண்ணெய் பசை சருமத்தை உடையவர்கள், அடிக்கடி குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். முகத்தை கழுவ சோப்பிற்கு பதிலாக கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக மாறிவிடும்.