அழகு தரும் சமையல் சோடாவை பயன்படுத்துவது எப்படி?

குறைந்த விலையில் கிடைக்கும் சமையல் சோடாவைக் கொண்டு தலைமுடி, சருமம், நகம் மற்றும் உடலின் பிற பகுதிகளை எப்படி அழகுப்படுத்திட முடியும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஷாம்புக்கள், சீரம்கள் என பல்வேறு விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு தலைமுடியின் எண்ணெய் பிசுக்கு போன்ற பிரச்சனைகளை சமாளித்து வருகிறோம். ஆனால், இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தேவையெல்லாம் சிறிதளவு சமையல் சோடா மட்டுமே. ஒரு தேக்கரண்டி சமையல் சோடாவை, சிக்கலான முடியை சரிசெய்ய பயன்படுத்தும் ஷாம்புவுடன் கலந்து முடியில் தேய்த்துக் கொண்டு, அரை தேக்கரண்டி சமையல் சோடாவை கலந்துள்ள தண்ணீரில் நன்றாக அலசி விடுங்கள்.

மிகவும் சிறப்பான முறையில் சமையல் சோடா பற்களை வெண்மைப்படுத்துகிறது. ஏனெனில் இதிலுள்ள மாலிக் அமிலம், இயற்கையாகவே கறைகளை எதிர்க்கும் குணம் கொண்டுள்ளது. பழுத்த ஸ்ட்ராபெர்ரி பழங்களை அரைத்து, சமையல் சோடாவுடன் பசை போல கலந்து கொள்ளவும். இந்த பசையை கொண்டு பற்களை சில நிமிடங்களுக்கு தேய்த்து, வாய் கொப்புளிக்கவும். இதன் பின்னர், பற்பசையை பயன்படுத்தி எஞ்சியுள்ள அழுக்குகளை நீக்க பல் தேய்க்கவும். இந்த வழிமுறையை ஒரு மாதத்திற்கு 2 அல்லது 3 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், அளவுக்கு அதிகமான மாலிக் அமிலம் பற்களின் எனாமலை பாதிக்கும்.

உங்களுடைய சருமம் சூரிய வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அங்கே சமையல் சோடா தான் சிறந்த நிவாரணி. சமையல் சோடாவையும், தண்ணீரையும் சேர்த்து, சுத்தமான துணி அல்லது பருத்தி துணியைக் கொண்டு சூரிய கொப்புளம் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மஞ்சளடைந்த நகங்கள் வயதான தோற்றத்தைக் காட்டும். ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் சமையல் சோடா ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கும் பசையை பயன்படுத்தி நகத்தை சுத்தம் செய்யலாம். எனினும், உங்களுடைய நகம் தொடர்ந்து மஞ்சள் நிறமாக இருந்தால், அது பூஞ்சைத் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். எனவே மருத்துவரின் ஆலோசனையைப் பெறத் தவற வேண்டாம்.

சமையல் சோடா ஒரு சிறந்த உலர் சரும நீக்கியாகவும் செயல்படும். அதற்கு 3 பங்கு சமையல் சோடா, 1 பங்கு தண்ணீர் என கலவையாக்கி கலந்து, முழங்கை, பாதம், கைகள் அல்லது சரும நீக்கம் செய்ய வேண்டிய இடம் ஆகிய இடங்களில் தடவிக் கொள்ளவும். எனினும், தோல் வெட்டுப்பட்டுள்ள இடங்களில் இந்த கலவையை பயன்படுத்த வேண்டாம்.