சருமம் அழகாக பட்டுப்போன்று மின்ன பாலை இப்படி பயன்படுத்துங்க!

முகத்திற்கு பாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், சருமம் நன்கு அழகாக பொலிவுடன் இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். முகத்தை சுத்தம் செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. ஆனால் அவற்றில் பாலை வைத்து சுத்தம் செய்வது தான் சிறந்தது. மேலும் தற்போது கிளின்சிங் மில்க் என்று கடைகளில் விற்கப்படுகிறது.

அவற்றை பயன்படுத்தினால் மட்டும் நல்ல பலனை அடைய முடியாது. அதற்கு இயற்கையாக பாலை வைத்து சுத்தம் செய்ய வேண்டும்.ஏனெனல் பாலில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இதனை வைத்து சருமத்திற்கு ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

பால் மற்றும் ரோஸ் வாட்டர்
முகத்திற்கு பாலை பயன்படுத்தும் விதங்களில் இது மிகவும் சிறந்த முறை. அதற்கு பாலுடன் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து, முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் நன்கு அழகாக காணப்படும்.

ஓட்ஸ் மற்றும் பால்
இது ஒரு ஸ்கரப் மற்றும் ஃபேஸ் கிளின்சர். அதிக நேரம் இல்லை, உடனே சருமத்தை அழகாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த முறை மிகவும் சிறந்தது. அதற்கு ஓட்ஸ் பவுடருடன், பாலை சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு தடவி சிறிது நேரம் தேய்த்து, பிறகு கழுவினால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும்.

பால் மற்றும் தேன்
பாலை தனியாக பயன்படுத்துவதை விட, தேனுடன் கலந்து பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். தேனில் நிறைய ஆன்டி-ஆக்ஸ்டன்ட்கள் இருக்கின்றன. ஆகவே முகத்தை அழகாக்குவதற்கு தேனைப் பயன்படுத்தினால், சருமத்திற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து, சருமத்தில் இருக்கும் கிருமிகள் அழிந்து வெளியேறி, சருமம் நன்கு பொலிவாக காணப்படும். மேலும் முகத்தில் முகப்பரு இருப்பவர்கள், இதனுடன் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து தடவினால் நல்லது.

பால் மற்றும் பப்பாளி
பப்பாளியில் சருமத்துளைகளில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றும் நொதிப் பொருள் அதிகமாக உள்ளது. ஆகவே பப்பாளி பேஸ்ட் உடன் சிறிது பாலை விட்டு, முகத்திற்கு தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவற்றால் சருமம் நன்கு புத்துணர்ச்சியுடனும் பொலிவோடும் காணப்படும்.

கேரட் மற்றும் பால்
கேரட்டை பேஸ்ட்டாகவோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொண்டு, அத்துடன் பாலை கலந்து, முகத்திற்கு தடவி, மசாஜ் செய்து, 2-3 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும். கேரட்டில் பீட்டா கரோட்டீன் இருப்பதால், இவற்றை சருமத்திற்கு பயன்படுத்தும் போது சருமம் இறுக்கமடைவதுடன், ஈரப்பசையுடன் இருக்கும். அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், இந்த முறையை செய்த பின் ஃபேஸ் வாஷை பயன்படுத்த வேண்டும்.