வீட்டில் உள்ள பொருட்களே போதுமே!!! உங்கள் சருமத்தை பாதுகாக்க!!!

அந்தக்காலத்தில் பெண்களும். ஆண்களும் அழகாகவும், இளமையோடும் வலம் வர காரணம் அவர்களது உடல் மற்றும் சருமப் பராமரிப்புகள் தான். உச்சி முதல் உள்ளங்கால் வரை அவர்கள் பராமரிப்பதற்கு பயன்படுத்திய பொருள்களைப் பார்த்தால் சாதாரணமாக வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருள்களாகவே இருக்கும்

வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே உங்களின் சருமத்தை அழகாக பராமரிக்க எளிய அழகு குறிப்புகள்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை வட்ட வடிவமாக நறுக்கி கண்களை மூடிய படி, இமைகளின் மேல் வைத்து ஐந்து நிமிடம் கழித்து எடுத்தால் கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். கணினி பணியிலிருப்பவர்களுக்கும், பணிச்சுமை அதிகம் இருப்பவர்களுக்கும் கண்களின் கீழ் கருவளையம் அதிகமாக தோன்றும்.

அவர்களுக்கு ஏற்ற மிகச் சிறந்த மருந்து பக்க விளைவுகள் இல்லாத வெள்ளரிக்காய் தான். அழகு நிலையங்களில் ஃபேஷியலின் போது கண் இமைகளின் மேல் வெள்ளரிக்காயை வைப்பது இதற்கு தான்.

முகவறட்சி நீங்க

வறண்ட சருமம் உள்ளவர்கள் முகத்திற்கு தேங்காய் எண்ணெய் (அ) கடுகு எண்ணெய் தடவினால் முக வறட்சி நீங்கும். உதடு வெடிப்புக்கு பசு நெய்யை தடவினால் உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

முகத்தில் உள்ள துவாரங்கள் வழியே மாசுக்கள் சென்றடைந்து முகம் பொலிவிழந்து காணப்படும். இதைத் தவிர்க்க தினமும் 4 லிருந்து 5 முறை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும். முகம் பிரகாசமாக இருக்கும். மாதம் ஒருமுறை வெந்நீரில் முகத்தை காண்பித்து (ஆவி பிடித்தல்) வந்தால் தலையில் உள்ள நீர் வெளியேறுவதோடு, முகத்தில் உள்ள பருக்களும் மறைந்துவிடும்.