வறண்ட சருமம் பொலிவு பெற பல வகையிலும் பால் உதவும்

சென்னை: வறண்ட சருமம் பொலிவு பெற பால் உதவும். இதற்கான அழகு குறிப்புகள் உங்களுக்காக.

முகத்தில் தோன்றும் சுருக்கங்களை கட்டுப்படுத்த தினமும் முகத்தில் பால் தடவ வேண்டும். இது முக சுருக்கத்தை கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது. தினமும் பாலுடன் 1/2 துண்டு வாழைப்பழத்தை சேர்த்து பேஸ்டு போல் அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ முக சுருக்கங்கள் மறைந்து விடும்.

முகம் வறண்டு போனால் நாம் வழக்கமாக மாய்சரைசர் பயன்படுத்துவோம். ஆனால் அவற்றில் இருக்கும் கெமிக்கல்ஸ் முகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அதற்கு பதிலாக முகத்திற்கு மாய்சரைசராக பாலை பயன்படுத்தலாம்.

சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க தினமும் உடல் முழுவதும் பாலை தடவ வேண்டும். இதன் மூலம் சூரிய ஒளியினால் கேடு விளைவிக்கும் கதிர்களிடமிருந்து சருமத்தை பாதுகாக்க முடியும்.

சூரிய ஒளியினால் முகத்தில் ஏற்படும் தடிப்புகள், வறண்ட சருமம், சரும அரிப்புகள் போன்ற பிரச்சனையை சீர் செய்கிறது. மேலும் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகுக்கிறது. ஆடை அணிந்து மறைக்கப்பட்ட பாகங்கள் ஒரு நிறமாகவும், சூரிய ஒளி தாக்குதலின் பாதிக்கப்பட்ட சருமங்கள் ஒரு நிறமாகவும் இருக்கும்.

இவற்றை சரிசெய்ய தினமும் உடல் முழுவதும் பாலை தடவி வர நிறமாற்றங்கள் அடைந்த பகுதிகள் ஒரே நிறத்தில் இருக்க வழிவகுக்கிறது.