முகத்தை பளபளப்பாக்கும் கடல் உப்பு!

செயற்கையான கிரீம்களை விட இயற்கை பொருட்களை வைத்து அழகை மேம்படுத்துவதுதான் நீண்ட காலத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும், எந்தவித பக்க விளைவுகளும் இதனால் ஏற்படாது. எளிய பொருட்களை வைத்தே முகப்பருக்கள், முக சொர சொரப்புகள், கருமை ஆகியவற்றை போக்குவதே சிறந்த ஒன்று.

நம் சமையல் அறையில் உள்ள பொருட்கள், காய்கறிகள், பழங்கள் போன்ற பொருட்கள் அழகு குறிப்புகளுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. இன்று நாம் கடல் உப்பை வைத்து எவ்வாறு முகத்தினை அழகு படுத்தலாம் என்று பார்க்கலாம்.

தேவையானவை
உப்பு 2 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் சிறிது

செய்முறை
உப்புடன் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழிவி விடவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முகம் பளபளவென மாறும்.