முடி உதிர்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும் இயற்கை எண்ணெய்!

இன்றய காலத்தில் பெண்கள் சந்திக்கும் முக்கிய அழகு பிரச்னைகளில் ஒன்று முடி உதிர்தல். கூந்தல் தொடர்பான பல பிரச்சனைகளையும் தலைக்கு எண்ணெய் தடவுவதன் மூலம் குறைக்கலாம் தெரியுமா உங்களுக்கு? அதற்கு நம் கையில் கிடைக்கும் எண்ணெய் வகைகளை பயன்படுத்தினால் தீர்வு கிடைக்காது. இதற்கு இயற்கை முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய் தான் சிறந்தது.

முடிஉதிர்வை சரி செய்ய நாம் பயன்படுத்த வேண்டியது கருஞ்சீரகமும், வெந்தயமும் கலந்து எண்ணெய் தயாரித்து பயன்படுத்துவது தான். சரி இனி கருஞ்சீரகமும் வெந்தயமும் கலந்து எப்படி எண்ணெய் தயாரிப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கருஞ்சீரகம் – 200 கிராம்
வெந்தயம் – 200 கிராம்
தேங்காய் எண்ணெய் – 250 மில்லி.

செய்முறை
கருஞ்சீரகத்தையும் வெந்தயத்தையும் மிக்ஸியில் நன்கு பொடித்து கொள்ளவும். இந்த பொடிகளை தேங்காய் எண்ணெயுடன் ஒரு பாத்திரத்தில் நன்றாக கலந்து விடுங்கள். அதன்பின் அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் வைத்து தண்ணீர் சூடானதும் நடுவில் இந்த பாத்திரத்தை வைத்து சூடு செய்து சற்று சூடானதும் கவனமாக அதனை வெளியே எடுத்து ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும். அதன்பின் தினமும் இந்த எண்ணெயை வெயிலில் வைக்கவும். தொடர்ந்து 5 நாள் இப்படி வைத்து எடுத்தால் எண்ணெயின் நிறம் மாறிவிடும். இப்படி நன்கு ஊறிய இந்த எண்ணெய்யை தலைக்கு தேய்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பயன்படுத்தும் முறை
சிறிதளவு எண்ணெயை உள்ளங்கையில் தடவி தலையின் ஸ்கால்பகுதியில் விரல்களால் மசாஜ் செய்து வந்தால் கூந்தல் மயிர்க்கால்களுக்கு நல்ல ஊட்டம் கிடைக்கும். முடி உதிர்தல் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இந்த எண்ணெய்யை தொடர்ந்து இரண்டு மாதங்கள் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முடி உதிர்தல் பிரச்சனையே இருக்காது.