தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் இயற்கை எண்ணெய்!

நம் அழகை எடுத்து காட்டுவது முடி தான். அதனால் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் முடியை பராமரிப்பதில் முக்கியத்துவம் செலுத்துகின்றனர். ஆனால் தற்போது பலருக்கும் இளமை பருவத்திலேயே தலைமுடி அதிக அளவில் உதிர்ந்து விடுகிறது. இதனை சரிசெய்ய நாம் இயற்கை முறையிலேயே எண்ணெய் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
தேங்காய் எண்ணெய் – 1/4 லிட்டர்
கறிவேப்பிலை – ஒரு கை பிடியளவு
வெந்தயம் – 3 ஸ்பூன் பொடித்தது
செம்பருத்தி பூ – 2

செய்முறை
முதலாவது பிரெஷ் கறிவேப்பிலையை நன்கு கழுவி அதை தண்ணீர் இல்லாமல் காய வைத்து கொள்ளுங்கள். அதன்பின் அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட விடாமல் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அதன்பின் எண்ணெய் காய வைக்க பயன்படுத்தும் கடாய் எடுத்து அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் பொடித்து வைத்திருக்கும் வெந்தயத்தை போட்டு விடுங்கள். பின் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடுங்கள். எண்ணெய் நன்கு கொதித்ததும் உங்களுக்கு வறட்சியான முடியாக இருந்தால் அதில் செம்பருத்தி பூவை போடுங்கள். இப்படி செய்த பிறகு 2 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள். அதன் பின் 5மணி நேரம் கழித்து அதில் உள்ள எசென்ஸ் எல்லாம் எண்ணெய்யில் இறங்கிய பின்னர் பில்ட்டர் செய்து பாட்டிலில் ஊற்றி விடுங்கள்.

இதனை ஆண், பெண் ஆகிய இருபாலரும் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்யை வாரத்தில் மூன்று நாள்கள் பயன்படுத்தினாலே போதும். ஒரு வாரத்திலேயே முடி உதிர்வை தடுக்கலாம். ஆனால் தலைக்கு குளிக்கும் போது ஷாம்பூ பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். இந்த எண்ணெய் மூன்று மாதங்கள் வரை கெட்டு போகாமல் இருக்கும்.