முடி உதிர்வு பிரச்சனையை போக்கும் இயற்கை பொருட்கள்!

நாம் அனைவருக்குமே தலை முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கும். ஆனால் தலைமுடியில் ஏற்படும் சில பிரச்சினைகளால் முடி உதிர்வு உண்டாகிறது. பொடுகு தொல்லை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் முக்கியமாக முடி உதிர்கிறது. இந்த பிரச்சினைகளை போக்க இந்த பதிவு உங்களுக்கு உதவிபுரியும்.

நெல்லிக்காய்
நெல்லிக்காய் தலையில் ஏற்படும் பல தரப்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கக்கூடியது. 5 உலர்ந்த நெல்லிக்காயை சுடுநீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து விட்டு, மறுநாள் காலையில் நெல்லிக்காயை எடுத்து அரைத்து, அதனுடன் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து இரண்டினையும் நன்கு கலந்து, தலையில் படும்படி தேய்த்து விட்டு 30 நிமிடம் அப்படியே ஊற விடுங்கள். 30 நிமிடம் கழிந்த பிறகு குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் முடி நன்கு வளரும்.

செம்பருத்தி பூ
செம்பருத்திப் பூவை எடுத்து அரைத்து, அதனுடன் ஆமணக்கு எண்ணெய் சிறிதளவு சேர்த்து இரண்டையும் நன்கு கலந்து, மயிர்க்கால்களில் படும்படி நன்கு தேய்த்து, அப்படியே 20 நிமிடங்கள் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இது முடி உதிர்வதை தடுக்கும் மற்றும் பொடுகு தொல்லை, நரைமுடி போன்றவற்றையும் போக்கும்.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலை இரவு தலையில் தேய்த்து விட்டு, மறுநாள் காலையில் குளித்தால் முடி பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.