உலர் சரும பிரச்சனையை போக்கும் இயற்கை குறிப்புகள்!

இன்றய காலக்கட்டத்தில் இளம் பெண்கள் சந்திக்கும் முக்கிய அழகு பிரச்சனைகளில் ஒன்று உலர் சருமம். இதனை போக்க சுலபமான பல இயற்கை வழிகள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முகத்தில் பூசிக்கொண்டு, 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவிக்கொள்ளவும். இதுவும் உலர் சருமத்தை குணமாக்குவதை உணரலாம்.

வெள்ளரிக்காயைச் சிறு துண்டுகளாக்கிக்கொண்டு, மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். அடுத்ததாக கொஞ்சம் ஆலோவேரா ஜெல் அல்லது யோகர்ட்ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளவும். பின்னர் இரண்டையும் நன்றாக கலந்து, முகத்தில் பூசிக்கொண்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவிக்கொள்ளவும்.

இரண்டு முட்டைகளை எடுத்து மஞ்சள் கருவை தனியே பிரிக்கவும். மஞ்சள் கருவை மட்டும் எடுத்து அதை கலந்து முகத்தில் பூசிக்கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவிக்கொள்ளவும்.

ஸ்பூன் கொண்டு இரண்டு வாழைப்பழங்களை நன்றாக மசித்து, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்துமுகத்தில் பூசிக்கொண்டு 20 நிமிடங்கள் அப்படியே இருக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீரால் முகம் கழுவிக்கொள்ளவும்.

5 ஸ்பூன் தேன், 5 ஸ்பூன் தூள் மற்றும் 2 ஸ்பூன் மாவு கொண்டு சாக்லெட் பேக்கும் செய்து பயன்படுத்தலாம். இந்த கலவையை முகத்தில் பூசிக்கொண்டு 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவிக்கொள்ளவும்.