அடர்த்தியான புருவங்களைப் பெற உதவும் இயற்கை வழிகள்!

கண்களின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் புருவங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அடர்த்தியான புருவங்களை பெற வீட்டில் இருக்கும் ஒருசில இயற்கைப் பொருட்களைக் கொண்டு பராமரித்து வந்தால், புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். இந்த பதிவில் அடர்த்தியான புருவங்களைப் பெற உதவும் இயற்கை வழிகளைப் பார்ப்போம்.

விளக்கெண்ணெய்
தினமும் இரவில் படுக்கும் போது புருவத்தில் விளக்கெண்ணெயை தடவி வந்தால், நிச்சயம் புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர்வதுடன், கருமையாகவும் வளரும்.

வேஸ்லின்
தினமும் 2-3 முறை புருவத்திற்கு வேஸ்லின் தடவி வந்தாலும், புருவங்களானது அடர்த்தியாக வளரும்.

தேங்காய் எண்ணெய்
பொதுவாக தேங்காய் எண்ணெய் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே அத்தகைய தேங்காய் எணணெயை தினமும் இரவில் படுக்கும் போது சூடேற்றி வெதுவெதுப்பான நிலையில் புருவங்களில் தடவி, இரவு முழுவதுங்ம ஊற வைத்து வந்தால், நாளடைவில் புருவங்களானது நன்கு வளர்வதைக் காணலாம்.

பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிக அளவில் இருப்பதால், அவற்றை அன்றாடம் புருவங்களில் தடவி வந்தால், புருவத்தின் அடர்த்தி அதிகரிக்கும்.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலும் மிகவும் சிறப்பான பொருள். அதனைக் கொண்டும் தினமும் புருவங்களை மசாஜ் செய்து ஊற வைத்து வைத்தால், புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.

கற்றாழை ஜெல்
கற்றாழையைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகம் பொலிவோடு இருப்பதுடன், புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.

வெங்காய சாறு
வெங்காய சாற்றினை காட்டனில் நனைத்து புருவங்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை செய்து வந்தாலும் புருவங்கள் வளரும்.

தேங்காய் பால்
தேங்காய் பால் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் சிறப்பான பொருள். எனவே அதனைக் கொண்டு புருவங்களை மசாஜ் செய்து வந்தாலும், புருவங்கள் நன்கு வளர்ச்சியடையும்.