இந்த பொருள்களை முகத்திற்கு பயன்படுத்தவே செய்யாதீங்க!

முகம் பளபளப்பாக வேண்டும் என்று பலரும் தங்கள் கைகளில் கிடைப்பதை எல்லாம் முகத்திற்க்கு உபயோகபடுத்துகின்றனர். இந்த பதிவில் நம் முகத்திற்கு பயன்படுத்தவே கூடாத ஒரு சில பொருள்களை பற்றி பார்க்கலாம்.

பொதுவாக நாம் ஷாம்பை நமது தலையில் உள்ள அழுக்குகளை கழுவ பயன்படுத்துகிறோம். ஆனால் தலைக்கு உபயோகபடுத்துகிற இந்த ஷாம்பை எந்த காரணத்தை கொண்டும் முகத்திற்கு பயன்படுத்தக் கூடாது. ஏன்னென்றால் இது உங்கள் முக சருமத்திற்கு உகந்தது அல்ல. முகத்திற்கு ஷாம்பை பயன்படுத்தும் போது சருமத்தில் வறட்சி, தோல் உரிதல், திட்டுகள் போன்றவை தோன்றக் கூடும். எனவே தலைக்கு தேய்க்கும் ஷாம்பை கொண்டு முகத்தை சுத்தம் செய்யாதீர்கள்.

சோப்பு உபயோகபடுத்தாதவர்கள் அரிது என்று தான் சொல்ல வேண்டும். நாம் அதிகமாக சோப்பை குளிப்பதற்கு, முகம் கழுவுவதற்க்கு உபயோகபடுத்துகிறோம். ஒரு போதும் சோப்பை முகம் கழுவுவதற்கு உபயோகப்படுத்துத்தாதீர்கள். ஏனென்றால் சோப்பில் pH-ன் அளவு அதிகம். நமது முகசருமம் சோப்பை விட குறைந்தளவு pH கொண்டுள்ளது. எனவே சோப்பை முகத்திற்கு பயன்படுத்தும் போது சரும பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சரும அரிப்பு, எரிச்சல், அழற்சி மற்றும் வறண்ட சருமம் உண்டாக வாய்ப்புள்ளது. சோப்பிற்கு பதிலாக பேஸ் வாஷ் பயன்படுத்துங்கள்.

பொதுவாக நம் பல் துலக்குவதர்கு டூத் பேஸ்ட் பயன்படுத்துகிறோம். சிலர் பருக்கள் மீது டூத்பேஸ்ட் தடவினால் சரியாகி விடும், சரும பாதிப்பிற்கு டூத்பேஸ்ட் சிறந்தது என்ற புரளி கதைகளை நம்பி பருக்கள் மீது தடவி வருகிறார்கள். ஆனால் உண்மையில் டூத்பேஸ்ட்டில் கலந்துள்ள நிறைய கெமிக்கல்கள் சரும எரிச்சலை ஏற்படுத்தக் கூடும். எனவே எக்காரணம் கொண்டும் டூத்பேஸ்ட்டை முகத்தில் அப்ளே செய்யாதீர்கள்.

பாடி லோசன் கெட்டியான திரவ சோப். இதில் ஏராளமான கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நிறைய பேர்கள் குளிக்கும் அவசரத்தில் பாடி லோசனைக் கூட முகத்திற்கு பயன்படுத்துவது உண்டு. ஒரு போதும் பாடி லோசனை முகத்திற்கு பண்படுத்தாதீர்கள். ஏனெனில் இதை உங்கள் முகத்தில் போடும் போது சரும துளைகள் அடைத்து வேறுபட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். எனவே பாடிலோஷனை முகத்திற்கு பயன்படுத்துவதை தடை செய்யுங்கள்.

சுடு நீரில் குளிப்பது உங்கள் உடம்பிற்கு சுகமாக இருப்பதை போல் உணருவீர்கள். ஆனால் அது உங்கள் சருமத்திற்கு கேடு விளைவிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் நீங்கள் சூடான நீரைக் கொண்டு முகம் கழுவும் போது முகத்தில் உள்ள ஈரப்பதம் குறைந்து சரும துளைகள் அடைபடக்கூடும். இதனால் பருக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சூடான நீரைக் கொண்டு முகத்தை கழுவாதீர்கள்.

தலைமுடி நரைத்தவர்கள் பொதுவாக தலைக்கு டை அடிக்கும் பழக்கத்தை வைத்திருகின்றனர். இப்படி அடிக்கும் பல டைகளில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு பயன்படுகிறது. இது உங்கள் சருமத்திற்கு உகந்தது அல்ல. இந்த ஹைட்ரஜன் பெராக்ஸைடு உங்கள் முகத்தில் படும் போது சரும செல்கள் உருவாக்கத்தை தடுத்து பாதிப்படைந்த சருமம் சரியாகுவது தடைபடுகிறது. எனவே டை அடிக்கும் போது கூட ஹைட்ரஜன் பெராக்ஸைடு முகத்தில் படாத வண்ணம் பயன்படுத்துங்கள்.