சருமத்தை மிளிர செய்யும் ஓட்ஸ்!

உடல் எடையை குறைக்க உதவும் மிக முக்கியமான உணவு வகைகளில் ஒன்று ஓட்ஸ். இதிலுள்ள நார்ச்சத்துகள் இதய நோய்கள், நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் சரும நிறத்தை மேம்படுத்த ஓட்ஸ் மிகவும் உதவுகிறது. இந்த பதிவில் நாம் சருமத்தை மிளிர செய்யும் ஓட்ஸ் பேக்கினை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
ஓட்ஸ் – 1/4 கப்
புளித்த தயிர் – சிறிதளவு

பயன்படுத்தும் முறை
முதலாவது ஓட்ஸை நீங்கள் இரவில் ஊறவைத்து விடுங்கள். அதன்பின் காலையில் ஊறவைத்த ஓட்ஸை அடுத்த நாள் காலையில் மிக்சியில் மையாக அரைத்து எடுத்து அதனோடு புளித்த தயிரை கலந்து பசை போல செய்து முகத்தில் தடவவும்.

இதனை முகம் மற்றும் உடலின் மற்ற பாகங்களுக்கும் பயன்படுத்தலாம். பயன்படுத்திய பிறகு 30 நிமிடம் கழித்து முகத்தை நன்கு தேய்த்து கழுவவும். ஓட்ஸ் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, எண்ணெய் பசை மற்றும் முகப்பருக்கள் ஏற்படுவதை தடுக்கிறது. தயிர் முகத்தை பளபளவென மாற்றுவதற்கு உதவுகிறது.