எண்ணெய் வழியும் முகமா... போக்குவதற்கு எளிய வழிமுறைகள் உங்களுக்காக!!!

சென்னை: முகத்தில் எண்ணெய் வழிவதால் பொது இடங்களுக்கு செல்லும் போது அவஸ்தைப்படுபவர்கிறீர்களா. அப்போ இயற்கை வழிமுறைகளை செய்து பாருங்கள்.

சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம் போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. மேலும் பலரும் எண்ணெய் வழிவதை தடுக்க பல்வேறு முகப்பூச்சுக்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இவை உண்மையில் சருமம் தொடர்புடைய நோய்களை ஏற்படுத்தும் என்பதே உண்மை. முகத்தில் எண்ணெய் வழிவதில் இருந்து இலகுவில் எவ்வாறு விடுபடலாம் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க கடைந்த மோரை எடுத்து கொள்ளுங்கள், அவற்றை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவ வேண்டும். 15 நிமிடம் வரை காத்திருந்த பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் வழியும் எண்ணெய் மறைந்து விடும்.

முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க 1/2 கப் தயிருடன், 1 தே.கரண்டி மஞ்சள் தூள், 1 தே.கரண்டி தேன், 1 தே.கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, முகம், கழுத்து, கை, கால்களில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இதனால் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்பட்டு, சிறந்த தோற்றத்தைக் கொடுக்கும். இந்த முறையை தொடர்ந்து செய்து வர எண்ணெய் பசை நீங்கும்.