சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் அன்னாசி பழம்

சென்னை: அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி இரண்டும் அதிகமாக இருக்கின்றன. இவையிரண்டுமே சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவன. குறிப்பாக நார்மல் ஸ்கின் மற்றும் ஆயில் ஸ்கின் இரண்டுக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவது தொடங்கி முகத்தை பளபளப்பாக்கவும் மாசு மருவற்ற சருமத்தை பெறவும் பல வழிகளில் அன்னாசியை பயன்படுத்த முடியும்.

அன்னாசியில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் இது பருக்களுக்கு எதிராக போராடும் தன்மையை கொண்டிருக்கிறது. பருக்களும் பருவால் ஏற்பட்ட தழும்புகளும் அதிகமாக இருந்தால் அதை சரிசெய்ய அன்னாசி பழத்தை டோனராக பயன்படுத்துங்கள்.

அன்னாசி பழத்தின் சாறை சிறிதளவு எடுத்துக் கொண்டு முகம் மற்றும் பருக்கள் உள்ள இடங்களில் டோனராக ஸ்பிரே செய்து கொள்ள வேண்டும். அதை அப்படியே 15 நிமிடங்கள் வரை உலர விடுங்கள். பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிக் கொள்ள வேண்டும். இப்படி செய்யும்போது விரைவிலேயே பருக்களும் பருவால் வந்த தழும்புகளும் மறைந்து க்ளியர் சருமத்தை பெற முடியும்

அதிகப்படியான சோர்வு, வயதாவது போன்ற காரணங்களால் கண்களைச் சுற்றிலும் அடிப்பகுதியிலும் கருவளையங்கள் தோன்றும். இந்த கருவளையங்களை சரிசெய்ய அன்னாசி பழச்சாறு உதவும்.

அன்னாசி பழத்தில் அதிகப்படியான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. இது வயதாவதால் உண்டாகும் கண் சுருக்கங்களை சரிசெய்ய உதவும். சிறிதளவு அன்னாசி பழத்தின் சாறினை எடுத்து அதை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து பத்து நிமிடங்கள் வரை கண்களை மூடி ஓய்வெடுங்கள். இதை தினமும் கூட செய்து வரலாம். இப்படி செய்து வரும்போது கண்களைச் சுற்றிலும் உண்டாகிற கருவளையங்கள் மற்றும் சுருக்கங்களை நீக்கச் செய்யும்.