சருமத்தை வெண்மையாக்கும் குங்குமப்பூ பேஸ் பேக்!

முக அழகை அதிகரிக்க பலவகையான விலையுர்ந்த பேஸ் பேக் வாங்க அதிக பணத்தை செலவளித்திருப்பீர்கள். ஆனால் அது எவ்வளவு விலையுயர்ந்ததாக இருந்தாலும் அதில் நிச்சயம் கெமிக்கல்ஸ் கலந்திருப்பார்கள். அதனால் உங்களால் முழுமையாக பலனை அனுபவிக்க முடியாது. அப்படிப்பட்ட மிக விலையுயர்ந்த பொருளில் ஒன்று தான் குங்குமப்பூ. இந்த குங்குமப்பூவை கொண்டு எப்படி பேஸ் பேக் தயாரிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
குங்குமப்பூ – 5
பால் – கால் டம்ளர்

செய்முறை
சருமத்தின் கருமையை குறைத்து சருமத்தை வெண்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க குங்குமப்பூ உதவுகிறது. இதில் உள்ள ப்ளீச்சிங் தன்மை நமது முகத்தில் படர்ந்திருக்கும் அழுக்கை போக்க உதவுகிறது.

இந்த பேக் தயாரிக்க முதலாவது கால் டம்ளர் பால் எடுத்து அதில் குங்குமப்பூ கலந்து நன்கு கொதிக்க விடுங்கள். பாலின் நிறம் மஞ்சளாக மாறும்போது இறக்கி விடுங்கள். அதன்பின்னர் பால் ஆறியபின்னர் முகம் முழுதும் தடவி அரைமணி நேரம் ஊற விடுங்கள். அரைமணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகம் கழுவுங்கள்.

இப்படி செய்து வந்தால் சருமத்தின் கருமை மறைந்து சில நாள்களில் முகம் பொலிவடைந்து பளபளப்பாக மாறும்.