முகத்தின் அழகை கூட்டும் வகையிலான வெள்ளரிக்காய் ஃபேஸ்பேக்கினை எவ்வாறு தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையானவை:
வெள்ளரிக்காய்- 1கேரட்- 1/2, முந்திரி- 2 தேன்- 1 ஸ்பூன் செய்முறை: வெள்ளரிக்காய் மற்றும் கேரட்டினை தோல் சீவி சிறு
துண்டுகளாக்கிக் கொள்ளவும். அடுத்து அதனுடன் முந்திரி மற்றும் தண்ணீர்
சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் தேன் சேர்த்து
கலந்தால் வெள்ளரிக்காய் ஃபேஸ்பேக் ரெடி. இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில்
தடவி, மசாஜ் செய்து வர வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால்
விரைவில் சிவப்பழகினைப் பெறுவீர்கள்.