ஹேண்ட்சம்மாக வலம் வர எளிய குறிப்புகள்!

ஆண்கள் தற்போது தங்களை ஹேண்ட்சம்மாக வைத்துக் கொள்ள பல வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். ஆண்களை இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க நல்ல பழக்கவழக்கங்கள், நல்ல உணவுகள், நல்ல உடற்பயிற்சி உதவுகின்றன. இதோடு கூட இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களையும் கடைபிடியுங்கள்!

தினமும் ஷேவிங் செய்வதால், அது உங்கள் முகத்தில் உள்ள தோலைப் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, தினமும் ஷேவிங் செய்வதைத் தவிருங்கள்.

உங்கள் இரு கண்களுக்குக் கீழே கருமை அண்டாமல் பளபளப்பாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு 3 நாட்களுக்கு ஒரு முறை கண்களின் மேல் வெள்ளரித் துண்டுகளை சிறிது நேரம் வைத்து எடுங்கள். இது கண்களைப் பாதுகாப்பாகவும், குளுமையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

வறட்சியான சருமம் உங்களை எப்போதும் வயோதிகராகத் தான் காட்டும். அத்தகைய வறட்சியயைப் போக்க உங்கள் சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான நல்ல மாய்ச்சுரைசர்களை உபயோகப்படுத்துங்கள்.

ஒரு நாளைக்கு 4 முறை உங்கள் முகத்தைக் கழுவுங்கள். இது உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய்ப் பதத்தையும், சுருக்கங்களையும் போக்குவதற்கு உதவும்.