தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் சின்ன வெங்காயம்

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க சின்ன வெங்காயம் உதவுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சமையலில் சாம்பாருக்கு அதிகம் சிறிய வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது. இந்த சின்ன வெங்காயத்தை உரிக்கும் போதே கண்களில் அருவி போல் நீர் வெளிவரும், இதற்கு காரணம் சின்ன வெங்காயத்தில் உள்ள சல்பர் தான். இந்த சல்பர் தான் முடி வளரவும் காரணமாக உள்ளது.

சிறிய வெங்காயத்தை அரைத்து முடியின் மயிர்க் கால்களில் பூசி வந்தாலே போதும், முடிவளர ஆரம்பிக்கும். வாரத்திற்கு இரு நாட்களை மட்டும் தேர்ந்தெடுங்கள். தினமும் தலைக் குளிக்க வேண்டாம். 5 அல்லது 6 வெங்காயத்தை எடுத்துக் கொண்டு அதை மை போல் அரைத்து வைக்கவும். அரைத்த வெங்காயத்தை முடியின் வேர்க்கால்களில் படும் படியும். வழுக்கை விழுந்த இடத்திலும் தேய்க்க வேண்டும்.

உலர்ந்தவுடன் சீயக்காய் பவுடரில் கஞ்சி கலந்து தலைக்கு குளிக்கவும். இதனால் முடியில் ஈரப்பசை இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு நாட்கள் என்று பயன்படுத்தி வர தலைமுடி வளர ஆரம்பிக்கும். ஆனால் இனிமேல் ஷாம்பூ மற்றும் ஹேர் ஜெல்களை பயன்படுத்தக் கூடாது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை மட்டும் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் மூன்றையும் சரிசமமாக ஒன்றாக கலந்து கொண்டு பயன்படுத்தவும்.

தினமும் கண்டிப்பாக எண்ணெய் தடவ வேண்டும். தலை முடியில் தடவுவதை விட வேர்க் கால்களில் தடவ வேண்டும். வழுக்கை தலையிலும் செய்தால் முடி வளர ஆரம்பிக்கும். வழுக்கையில் முடி வளரும் ஆனால் பலவீனமாக இருக்கும் ஒரு காற்றடித்தாலே பறந்து விடும். எனவே இந்த எண்ணெய் மற்றும் வெங்காயத்தை பயன்படுத்துங்கள் கண்டிப்பாக உங்களுக்கு முடி வளரும்.