உங்கள் அழகான கேசம் மற்றும் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

நம்முடைய சருமத்தை நாமே பராமரித்துக் கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமான வேலையெல்லாம் இல்லை என்று நீங்கள் புரிந்துகொண்டாலே போதும்.

தலைமுதல் பாதம் வரை அழகாக ஜொலிக்க சில அடிப்படையான அழகுப் பராமரிப்புக் குறிப்புகளை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டாலே போதும்.

கூந்தலை அலசும்போது கடைசியில் சிறிதளவு வினிகரை ஒரு கப் தண்ணீரில் கலந்து அலசினால், கூந்தல் பளபளப்பாகும்.

பாதாம் எண்ணெய்

இரவில் தூங்கச் செல்லும்முன் முகம், கை மற்றும் கால்களை நன்றாகக் கழுவி சுத்தம் செய்யவும். கை மற்றும் கால்களில் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசரைக் கொண்டு மசாஜ் செய்தால் மென்மையாகவும், நல்ல நிறமாகவும் இருக்கும்.

பாலில் சிறிதளவு மஞ்சள் மற்றும் கடலை மாவைக் கலந்து குளித்து வந்தால் நல்ல நிறம் கிடைக்கும்.

எலுமிச்சை சாறு

கை முட்டிகளில் உள்ள கருமை நீங்க, எலுமிச்சைப்பழத்தின் சாறைத் தேய்க்க வேண்டும்.

உருளைக்கிழங்கின் சாறை முகத்தில் தடவினால், பிளீச்சிங் செய்த பலன் கிடைக்கும்.

கண் இமைகளில் பாதாம் அல்லது விளக்கெண்ணெயை இரண்டு துளிகள் விட்டுத் தூங்கினால், கண் இமை கருப்பாக நீண்டு வளரும்.

குளித்தபின் கைகளில், கிளிசரின் மற்றும் பன்னீர் கலந்து தடவினால் கைகள் மென்மையாக மாறும்.

பாலாடை

உதடுகளில் பாலாடையைத் தடவி வந்தால், வறண்டு போன உதடுகள் மென்மையாக மாறும்.

களைப்படைந்த கால்களை மிதமான உப்புக் கலந்த சுடுநீரில் 5 நிமிடம் ஊறவைத்து, பின் சிறிதளவு தேங்காய் எண்ணெயைத் தடவி விட்டு தூங்கினால் இரவில் ஆழ்ந்த உறக்கம் வரும்.

அழகு, பாலாடை, தேங்காய் எண்ணெய், ஆழ்ந்த உறக்கம், பன்னீர்