முக அழகுக் குறிப்புகள் சில

முக அழகுக் குறிப்புகள் சில முகக் கருமை நிங்கி பளபளக்க: சர்க்கரை ---- 2 டீஸ்பூன் காற்றலை ஜெல் ---- 1 டீஸ்பூன் பால் (காய்ச்சாதது) ---- 2 டீஸ்பூன் செய்முறை : மூன்றையும் ஒன்றாக பேஸ்ட் போல் கலக்க வேண்டும். முகத்தில் தடவி 15 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். ஈரத் துணியால் துடைத்தெடுக்கவும்.

கன்னங்கள் அழகாவதற்கு சில டிப்ஸ் : மூன்று ஆப்பிள் துண்டுகள், மூன்று கேரட் துண்டுகள் இவற்றை துருவி ஜுஸ் செய்து, இதனுடன் அரை முடி எலுமிச்சை சாறு கலந்த தினமும் காலையில் குடித்து வந்தால், கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம் மற்றும் பளபளப்பு கூடும். வறண்ட சருமம் பளபளக்க : உடல் வறட்சியை போக்குவதில் எள்ளுக்கு முக்கிய பங்குண்டு. 2 டீஸ்பூன் எள்ளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் பயத்தமாவு கலந்து முகத்தில் பூசி வர முகச்சுருக்கம் மறைந்து விடும்.