வெள்ளை முடியை இயற்கை முறையில் கருமையாக்க சில டிப்ஸ்!!!

சென்னை: வெள்ளை முடியை மறைக்க ஹேர் டை அல்லது கெமிக்கல் பேஸ்டு ஹேர் கலர் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.

ஆனால் இது முடியை உயிரற்றதாக மாற்றிவிடும். எனவே நீங்களும் வெள்ளை முடியை இயற்கையாகவே கருப்பாக்க விரும்பினால், இந்த வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

முடியை கருப்பாக்க வெங்காய சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி பாருங்கள். நல்ல தீர்வு கிடைக்கும். தலையில் உள்ள வெள்ளை முடியை கருப்பாக மாற்ற வெங்காய சாறு பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும் இது முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. இதற்கு முதலில் ஆலிவ் எண்ணெயில் வெங்காய சாறு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். இது முடியை வலுவாக்கும் மற்றும் வெள்ளை முடியை குறைக்கும்.

பிளாக் டீ: பிளாக் டீயை பயன்படுத்தி, இயற்கையாகவே முடியை கருப்பாக்கலாம். ஏனெனில் அவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளன, இது முடியை கருமையாக்க உதவுகிறது. இதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் 2 ஸ்பூன் பிளாக் டீ மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். இப்போது அதை வடிகட்டி, இந்த நீர் ஆறியதும், உங்கள் தலைமுடியில் தடவவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு: தேங்காய் எண்ணெய் முடியை இயற்கையாக வலுப்படுத்த உதவுகிறது. தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து முடியை மசாஜ் செய்யவும். இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் வெள்ளை முடி வருவதை குறைக்கலாம்.

இஞ்சி மற்றும் தேன்: இஞ்சி மற்றும் தேன் கலவையானது முடியை கருமையாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு இஞ்சியை துருவி, அதில் தேன் கலந்து கொள்ளவும். இப்போது இந்த பேஸ்ட்டை முடியில் தடவவும். சுமார் அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும். இந்த செயல்முறையை வாரத்திற்கு இரண்டு முறையாவது செய்ய வேண்டும்.