உதடுகள் இளஞ்சிவப்பாக மாற இயற்கை வழி!

நம் முகத்திற்கு அழகு தருவதே உதடுகள் தான். இந்த உதடுகள் கருப்பாக இருப்பதை யாரும் விரும்புவதில்லை. அப்படி பட்ட இந்த உதடுகளை சிவப்பு நிறத்தில் பளபளக்கச் செய்ய நம் வீட்டில் சமயலறையில் உபயோகப்படுத்தும் பொருள்களே போதுமானது. அப்படி என்னென்ன பொருள் பயன்படுத்தலாம் என்று இந்த பதிவில் பார்ப்போம்

தேவையான பொருள்கள்
எலுமிச்சை – 1
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
தேன் – அரை ஸ்பூன் அல்லது
பால்- அரை டீஸ்பூன்,
கற்றாழை சாறு – அரை டீஸ்பூன்,
க்ளிசரின் – கால் டீஸ்பூன்

செய்முறை
முதலில் மஞ்சள் தூள், தேன், கற்றாழை சாறு, க்ளிசரின் ஆகியவற்றை நன்கு கலக்கி பத்து நிமிடங்கள் வைத்துக்கொள்ளவும். அதன்பின் எலுமிச்சையில் பாதி எடுத்து கலக்கி வைத்திருக்கும் இந்த கலவையில் தொட்டு உதட்டின் மீது மெதுவாக மசாஜ் செய்ய வும். இது உதட்டின் மீது மட்டுமே படும்படி கவனமாக செய்ய வேண்டும்.

இப்படி நீங்கள் திரும்ப திரும்ப செய்யவும். உதட்டின் மீது தடவி காயும் போது பன்னீர் தொட்டு வைத்து, அரை மணி நேரம் கழித்து உதட்டை நன்கு குளிர்ந்த நீரில் கழுவி எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் உதட்டின் நிறம் விரைவில் இளஞ்சிவப்பாக மாறி விடும்.

வீட்டில் வளரக் கூடிய சிவப்பு ரோஜா பூக்களில் 2 எடுத்து அதன் இதழ்களை அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் வெண்ணெய் சேர்த்து கலந்து தினமும் இரண்டு முறை உதட்டில் தடவி மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.