உதடுகள் இயற்கையாக சிவப்பாக மாற எளிமையான வழி

இளம்பெண்களுக்கு தங்களின் உதடுகள் அழகாக எப்போதும் சிவப்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.
உதடுகள் அழகாக சிவப்பாக என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் எலுமிச்சை சாற்றைத் தனியாக பிழிந்து கொள்ளவும். பின்பு சிறிதளவு மஞ்சள் தூளை அதனுடன் கலந்து கொள்ளவும். பின்பு அதை எடுத்து உதட்டில் தடவிக் கொள்ளவும். பின்பு 10 நிமிடம் அப்படியே வைத்துக் கொள்ளவும். பின் தண்ணீரில் கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உதடுகள் சிவப்பாக மாறும்.

இதேபோல் சிறிதளவு தயிரை எடுத்து கொண்டு உதட்டில் தடவிக் கொள்ளவும். பின்பு 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கருமை நிறம் மறைந்து உதடு சிவப்பாகும். ரோஸ் வாட்டரை எடுத்து சிறிதளவு பஞ்சில் நனைத்து இரவில் தூங்கப்போகும் முன் உதட்டில் வைத்து தேய்க்கவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உதட்டின் கருமை நிறம் மறைந்து உதடு சிவப்பாக மாறும். இதனை வாரம் தோறும் செய்ய வேண்டும்.

சிறிதளவு பாலாடையை எடுத்துக் கொள்ளவும். நெல்லிக்காய் சாற்றை எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து கொண்டு உதட்டில் தேய்க்கவும். ஒரு பத்து நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் உதட்டின் நிறம் சிவப்பாகும். சிறிதளவு வெண்ணெயை எடுத்து கொள்ளவும். அதனுடன் ஆரஞ்சுப் பழ சாற்றை கலந்து கொள்ளவும். பின் அதை எடுத்து உதட்டில் தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்பு 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் உதட்டின் நிறம் மாறி உதடு மென்மையாகும்.