உள் தொடைகளை ஒளிரச் செய்ய இதோ வந்துவிட்டது தீர்வு!

பெண்கள் மற்றும் ஆண்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான அழகு பிரச்சினைகளில் ஒன்று தொடைப்பகுதி கருப்பாக இருப்பது. கவலை பட வேண்டாம் உங்கள் உள் தொடைகளை ஒளிரச் செய்ய இதோ வந்துவிட்டது தீர்வு.

நிறமியைக் கையாள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று எலுமிச்சைசாறு ஆகும். ஏனெனில் இதில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது. இது சேதமடைந்த தோல் செல்களை சரிசெய்ய உதவுகிறது. தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றை கலந்து 10-15 நிமிடங்கள் இந்த கலவையை உங்கள் உள் தொடைகளில் தடவவும்.

தோல்கள் ஒன்றோடொன்று உராய்வதன் மூலம், உள் தொடை கருமையாக மாறுகிறது. நீங்கள் சமையல் சோடா மற்றும் தண்ணீரின் கலவையை முயற்சி செய்யலாம். இது சருமத்தில் உள்ள கருமையை வெளியேற்ற உதவும். இதை தொடையில் தடவி 10-15 நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவவும். பேக்கிங் சோடா சில தோல் வகைகளில் கடுமையானதாக இருப்பதால் எச்சரிக்கையாக இதை கையாள வேண்டும்.

உருளைக்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் வெட்டிய ஒரு சிறு உருளைக்கிழங்கு துண்டை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி மசாஜ் செய்யவும். நீங்கள் அதை 10 நிமிடங்கள் தேய்க்கலாம். உருளைக்கிழங்கில் கேடகோலேஸ் உள்ளது. இது தோல் அமைப்பில் இருக்கும் கருமையை வெளியேற்ற உதவுகிறது.