நரை முடி பிரச்னைக்கு தீர்வாகும் இயற்கையான ஹேர்டை

நரை முடி என்பது பலரும் சந்திக்கும் பிரச்சினையாக இருந்து வருகின்றது, இந்தப் பிரச்சினைக்குப் பலரும் தேர்ந்தெடுப்பது செயற்கையான ஹேர் டைகளாகவே இருக்கும். ஆனால் செயற்கை ஹேர் டையானது பிற்காலத்தில் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக இருப்பதால் இயற்கையான தீர்வினைக் காண்பதே சிறப்பானதாக இருக்கும். அந்த வகையில் இயற்கை முறையில் ஹேர் டை செய்முறை உங்களுக்காக.

தேவையானவை:

காபித் தூள்- 1 ஸ்பூன்

நெல்லிக்காய்- 2

தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை: நெல்லிக்காயினை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
அதனை வெயிலில் காயவைத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து காபித் தூளுடன் நீர் சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் நெல்லிக்காய் பொடி சேர்த்து கலந்து தேங்காய் எண்ணெயினைக் கலந்து ஊறவிடவும். இந்த ஹேர்டையினை தலை முடி, வேர்க்கால் என அனைத்து இடங்களிலும் அப்ளை செய்தால், முடியானது கருப்பாக மாறும் என்பது உறுதி, இதனை வாரத்தில் 3 முறை கட்டாயம் செய்யவும். எளிமையானது... எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்காது.