எளிய முறையில் பருக்களை விரட்ட இதை முயற்சி பண்ணுங்க..!

முகத்தில் பருக்கள் தோன்றுவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை. 12 வயதினருக்கும் பருக்கள் தோன்றலாம், 34 வயது வயதினருக்கும் பருக்கள் தோன்றலாம். ஆனால் உண்மையில் பருக்கள் தோன்றுவதற்கான சரியான காரணம் இது வரை அறியப்படவில்லை. பருக்களைப் போக்க பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. ஆனால் மிக எளிய முறையில் பருக்களுக்கான சிகிச்சைப் பெற உப்பு நீரைப் பயன்படுத்தலாம்.

சரும சிகிச்சைக்கு மாத்திரை மருந்துகள் பயன்படுத்துவதை பலரும் விரும்புவதில்லை. இந்த வகை மக்கள், உப்பு நீரை ஒரு சிறந்த மாற்றாக பயன்படுத்தலாம். இருப்பினும், உப்பு நீரைப் பயன்படுத்தி பருக்களைப் போக்குவதில் பல வழிகள் உள்ளன. அதில் ஒரு பொதுவான வழிமுறை, வெதுவெதுப்பான நீரில் உப்பு நீர் சேர்த்து பயன்படுத்துவது. இப்படி உப்பு சேர்த்து தயாரித்த நீரில், பஞ்சை நனைத்து முகத்தில் தடவலாம்.

இந்த நீரை, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஸ்ப்ரே செய்வது அல்லது முகத்தில் தெளித்துவிட்டு கழுவுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இப்படி செய்வதால் கண்களில் உப்பு நீர் நுழைந்து எரிச்சல் ஏற்படலாம்.

சருமத்தில் உள்ள எண்ணெய் பதத்தை உப்பு குறைக்க உதவுவதால், பருக்கள் தொடர்பான பிரச்சனை குறைய வாய்ப்பு உள்ளது. சருமத்தைத் தளர்த்துவதில், உப்பு ஒரு சிறந்த மூலப் பொருளாக உள்ளது.

கடல் நீரிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட உப்பு, பருக்கள் பிரச்சனையைப் போக்க ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. குழாய் நீரைவிட இந்த நீரில் மினரல் அளவு அதிகம் உள்ளது. நீங்கள் கடலோரப் பகுதிகளில் வசிக்கவில்லை என்றால், நீங்கள் பயன்படுத்தும் வழக்கமான நீரில் கல் உப்பு சேர்த்து பயன்படுத்திக் கொள்ளலாம். சோடியம் சேர்க்கப்பட்ட உப்பை விட, மெக்னீசியம் அடிப்படையில் உள்ள எப்சம் உப்பைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் உப்பு நீர் பயன்படுத்தி பருக்களை போக்க நினைத்தால் அதனைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். பாதிக்கபட்ட இடத்தில் உப்புநீர் படும்போது, அதிக வலியை ஏற்படுத்தும்.