கண்ணாடி அணிந்தாலும் அழகாக தெரியணுமா? சில டிப்ஸ் உங்களுக்காக!!!

சென்னை: இன்றைய காலக்கட்டத்தில் இளம்வயதிலேயே கண்ணாடி அணியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் எப்போதும் கணினி முன்பு இருப்பது மட்டுமின்றி, எந்நேரமும் மொபைலை நோண்டிக் கொண்டே இருப்பதும் ஒரு காரணமாகும்.

கண்ணாடி அணிந்திருப்பதால் தாங்கள் அழகாக காணப்படுவதில்லை என்ற எண்ணம் இருக்கும். குறிப்பாக பெண்கள் தான் அதிக கவலை கொள்வார்கள். ஆனால் சரியான மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலைப் பின்பற்றி வந்தால், நீங்கள் கண்ணாடியில் அழகாக காட்சியளிக்கலாம். இங்கு கண்ணாடி போட்டாலும் அழகாக காட்சியளிக்க ஒருசில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி அழகாக காட்சியளியுங்கள்.

காஜல்: கண்கள் சிறியது என்றால், கண்களுக்கு காஜல் போடுங்கள். இதனால் கண்கள் பெரிதாக காணப்படும். ஒருவேளை கண்கள் சாதாரணமாகவே பெரியது என்றால், கண்களுக்கு அளவாக காஜல் போடுங்கள். இதனால் கண்கள் அழகாக காட்சியளிக்கும்.

லைட் ஐ ஷேடோ: கண்களுக்கு கண் மை அடர்த்தியாக போட்டிருந்தால், ஐ ஷோடோ போட வேண்டாம். அதுவே அளவாக கண் மை போட்டிருந்தால், அளவாக ஐ ஷேடோ போடுங்கள். இதனால் கண்கள் அழகாக காணப்படும்.

பொட்டூ கண்ணாடி அணிந்து பாரம்பரிய உடையான புடவையில் செல்லும் போது, அழகாக காட்சியளிக்க, வட்டமாக பொட்டு வைத்துக் கொண்டு செல்லுங்கள். இதனால் அது அற்புதமான தோற்றத்தைத் தரும்.

உதடுகளுக்கு லிப்ஸ்டிக்: கண்ணாடி அணிபவர்கள் அழகாக காணப்பட, கண்களுக்கு மட்டுமின்றி உதடுகளின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். அதிலும் உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போடுவது நல்ல தோற்றத்தைத் தரும். இல்லாவிட்டால், பிங்க் நிற லிப்ஸ்டிக் வேண்டுமானாலும் போடலாம்.