ஒரு சவரன் தங்கம் இன்று ரூ.40 குறைந்தது

சென்னை: இந்தியாவில் குறிப்பாக சொல்லப்போனால் தமிழ்நாட்டில் தங்கம் ஒரு ஆபரண பொருளாக மட்டுமில்லாமல் ஒரு கௌரவமாக பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் அதற்கு ஏற்றார் போல் தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. மக்கள் பலரும் கொரோனா காலத்திற்கு பிறகு தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்து கொண்டு வருகின்றனர்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 சரிந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ.42,640 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,330க்கு விற்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் அதிகரித்து ரூ.72.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.72500க்கு விற்கப்படுகிறது.