பொங்கல் பண்டிகை முடிந்துள்ள நிலையில் இன்று தங்கத்தின் விலை சரிவு

சென்னை: சவரனுக்கு ரூ. 40 குறைந்தது ... தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையானது விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வந்தது. இதனால் தங்க வியாபாரிகளும் தங்க நகைகளை விரும்பி அணிபவர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இதையடுத்து இத்தகைய சூழலில் தங்கத்தின் விலையானது தினதோறும் உயர்ந்து வருவது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புது தங்க அணிகலண்கள் வாங்க வேண்டும் என முயற்சித்தவர்கள் தங்கத்தின் விலையை அறிந்து நகைகள் வாங்குவதில் தயக்கம் காட்டி வந்தனர்.

இவ்வாறு தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலையானது இன்றைய நிலவரப்படி எதிர்பாராத விதமாக சற்று குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 40 குறைந்து ரூ. 42,320-க்கு விற்பனையாகிறது.

அதே போன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 5 குறைந்து ரூ. 5,290-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி கிராமுக்கு 1.30 காசுகள் குறைந்து ரூ.73.50-க்கு, விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.73,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.