2020 ஆண்டின் டாப் 10 டிரெண்டிங் ஆப்ஸ் எவை தெரியுமா ?

2020 ஒருவழியாக நிறைவுக்கு வந்து விட்டது. பெரும்பாலான சேவைகள் முழுமையாக ஆன்லைன் மயமாகிவிட்டன. உடல்நலம் துவங்கி அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு என பல்வேறு பிரிவுகளில் செயலிகள் 2020 ஆண்டில் செயலிகள் அதிக பிரபலமாகி இருக்கின்றன. டிஜிட்டல் பணப்பரிமாற்ற செயலிகளான கூகுள் பே, பேடிஎம், போன் பே உள்ளிட்டவைகளின் பயன்பாடு பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. இதேபோன்று பொழுதுபோக்கு செயலிகள், சமூக வலைதள செயலிகளும் பிரபலமாகி இருக்கின்றன.

டிக்டாக் : டிக்டாக் செயலி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், டிக்டாக் இந்த ஆண்டு அதிக பிரபல செயலியாக இருக்கிறது. இந்த ஆண்டு இதன் பயனர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் : பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் போட்டோ-ஷேரிங் செயலி ஆகும். இது சமூக வலைதள செயலிகளில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் செயலிகளை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகிக்கிறது. பொழுதுபோக்கு மட்டுமின்றி பயனர்களின் திறமையை வெளிப்படுத்தும் தளமாகவும் இது மாறி இருக்கிறது.

ஜூம் : உலகில் தற்சமயம் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக ஜூம் இருக்கிறது. இந்த செயலிக்கான தட்டுப்பாடு கடந்த ஆறு மாதங்களில் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. கொரோனாவைரஸ் பரவலை தடுக்க மக்கள் வீட்டில் இருந்தபடி வெளி உலகத்துடன் தொடர்பில் இருக்க இந்த செயலி உதவுகிறது.
வாட்ஸ்அப் : ஜூலை 2020 நிலவரப்படி உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. இந்த செயலி உலகம் முழுக்க சுமார் 200 கோடி டவுன்லோட்களை கடந்து உள்ளது.

நெட்ப்ளிக்ஸ் : பிரபல ஒடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் பல்வேறு தரவுகளை வழங்குகிறது. வீடியோ ஸ்டிரீமிங் செயலிகள் பிரிவில் நெட்ப்ளிக்ஸ் முதலிடம் பிடித்து இருக்கிறது.
பேஸ்புக் : மக்கள் தங்களின் உறவினர், நட்பு வட்டாரத்துடன் உலகின் எந்த பகுதியில் இருந்தும் தொடர்பு கொள்ள பேஸ்புக் சிறந்த தளமாக இருக்கிறது. ஊரடங்கு காலக்கட்டத்தில் ஆன்லைன் வியாபார வழக்கம் அதிகரித்து இருக்கும் சூழலில் பேஸ்புக் லைவ் மூலம் பொருட்களை நேரடியாக விற்கவும் முடிகிறது.

அமேசான் : 2020 ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட செயலிகளில் ஒன்றாக அமேசான் இருக்கிறது. இதேபோன்று நெட்ப்ளிக்ஸ் சேவைக்கு மாற்றாக அமேசான் பிரைம் வீடியோ சேவையை வழங்குகிறது. இத்துடன் அமேசான் பேண்ட்ரி மூலம் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்க முடியும்.
கூகுள் மீட் : ஜூம் செயலிக்கு மாற்றாக கிடைக்கும் கூகுள் மீட் கொரோனாவைரஸ் பாதிப்பு காலக்கட்டத்தில் மக்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றும் போது அதிக பிரபலமானது.

பேஸ்புக் மெசஞ்சர் : வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிக்கு மாற்றான குறுந்தகவல் செயலியாக பேஸ்புக் மெசஞ்சர் இருக்கிறது. உலகம் முழுக்க இந்த செயலியை பலர் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் இந்த செயலியில் பேஸ்புக் பல்வேறு புது அம்சங்களை சேர்த்தது.
யூடியூப் : உலகில் அதிகம் பேர் பார்க்கும் தளமாக யூடியூப் இருக்கிறது. மேலும் முன்னணி வீடியோ தளமாகவும் இது இருக்கிறது. இந்த செயலி கொண்டு பயனர்கள் தங்களின் திறமையை உலகிற்கு எடுத்துரைக்க முடியும்.