தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்தது!

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்கள் முன்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் 30 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை சற்றென 40 ஆயிரத்தை தாண்டியது.

அதன்பிறகு தங்கம் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த 10-ந்தேதி தங்கம் விலை ரூ.39 ஆயிரத்துக்குள் வந்தது. அன்று பவுன் ரூ.38 ஆயிரத்து 240-க்கு விற்றது. அதன்பின் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலையில் இன்று 2-வது நாளாக குறைவு காணப்பட்டது. நேற்று பவுனுக்கு ரூ.136 குறைந்து ரூ.38,432-க்கு விற்றது. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38,272-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,784 ஆக உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரு.600 குறைந்து ரு.67 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.67.70-க்கு விற்கிறது.