தங்கம் விலையானது தொடர்ந்து உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45 ஆயிரத்தை நெருங்கியுள்ளது .. தங்கத்தை நகைகளாக அணிவது மட்டுமல்லாமல் அதில் முதலீடு செய்து தேவையான நேரத்தில் அதை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இத்தகைய தன்மை கொண்ட தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில ஏற்ற இறக்கம் கண்ட நிலையில், இன்றும் கடுமையாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மக்களின் விருப்பமான பொருள்களின் வரிசையில் முதலிடத்தில் தங்கம் இருக்கிறது. தங்கம் ஆபரணமாக இருந்தாலும் காசாக இருந்தாலும் அதன் மதிப்பு ஒரே மாதிரி இருக்கிறது. அதனால் தங்கத்தில் முதலீடு செய்ய யாரும் தயங்கவில்லை.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதையடுத்து நேற்று 22 கேரட் தங்கம் ரூ.5590க்கு விற்பனை செய்யப்பட்டது.

அந்த வகையில் இன்று தங்கம் கிராமிற்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5610க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 1 சவரன் தங்கம் ரூ. 160 உயர்ந்து ரூ.44880க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 24 கேரட் தங்கம் கிராம் ரூ.6077 க்கும், சவரன் ரூ.48616 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று வெள்ளி விலை 40 காசுகள் உயர்ந்து 1 கிராம் ரூ. 82.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.