ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உள்நாட்டு வாகன விற்பனையில் வளர்ச்சி

ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் நவம்பர் மாத வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டிருக்கிறது. அதன்படி உள்நாட்டு வாகனங்கள் விற்பனை வளர்ச்சி பெற்ற நிலையில், வெளிநாட்டு ஏற்றுமதியில் 122 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

2020 நவம்பர் மாத வாகன விற்பனையில் ராயல் என்பீல்டு மொத்தம் 63,782 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 60,411 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதன்படி வாகன விற்பனையில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

வருடாந்திர அடிப்படையை பொருத்தவரை வாகன விற்பனையில் 30 சதவீத வீழ்ச்சியடைந்து இருக்கிறது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு ராயல் என்பீல்டு 3,38,461 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் ராயல் என்பீல்டு 4,82,673 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

சமீபத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் தனது தன்டர்பேர்டு மாடலுக்கு மாற்றாக Meteor350 மோட்டார்சைக்கிளை வெளியிட்டது. புதிய Meteor350 மாடல் பயர்பால், ஸ்டெல்லார் மற்றும் சூப்பர்நோவா என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.