உயர்ந்த சிறப்பம்சங்கள் கொண்ட ஹூவாய் ஒய்9ஏ ஸ்மார்ட்போன்

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனம், ஹூவாய் ஒய் 9 ஏ குவாட் கேமராவினை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏராளமான சிறப்பம்சங்கள் அடங்கி உள்ளது.

ஹூவாய் ஒய்9ஏ ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 எஸ்ஓசி ஓவர் டைமன்ஷன் 720 (MT6853) சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது. ஹூவாய் ஒய் 9ஏ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்ட் 10 ஓஎஸ் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

மேலும் இது 6.63 அங்குல முழு ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினையும், மேலும் மாலி-ஜி 52 எம்சி 2ஜிபியூ மற்றும் 6ஜிபி ரேம், ஆக்டோகோர் மீடியா டெக் ஹீலியோ ஜி 80 எஸ்ஓசி செயலியினைக் கொண்டுள்ளது.

அசர வைக்கும் அம்சங்களுடன் ஹூவாய் ஒய்9ஏ ஸ்மார்ட்போன்!!
கேமராவினைப் பொறுத்தவரையில், 64 எம்பி பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் செகண்டரி கேமரா 2 மெகாபிக்சல் ஆழ லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை, மைக்ரோ எஸ்டி கார்ட் வழியாக 256 ஜிபி விரிவாக்கம், 4ஜி எல்டிஇ வோல்ட், வைஃபை, ப்ளூடூத் வி 5.1, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இது 4300 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.