புதிய ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்

இந்திய சந்தையில் ஒப்போ நிறுவனத்தின் புதிய ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 2ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர்ஒஎஸ் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போன் ஃபுளோவிங் சில்வர் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ11கே சிறப்பம்சங்கள்
6.22 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச்
ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
2 ஜிபி ரேம்
32 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒஎஸ் 6.1
13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
2 எம்பி இரண்டாவது கேமரா, f/2.4
5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
டூயல் சிம்
கைரேகை சென்சார்
3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
4230 எம்ஏஹெச் பேட்டரி