உயர்ந்த இதன் விலை இன்று வரை குறையவே இல்லை

சென்னை: இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 64 உயர்வு .... இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் நுகர்வு எப்போதும் அதிகமாகவே இருக்கும். தங்கத்தை மக்கள் ஒரு வகையான கலாசார வழக்கமாகவும், சேமிப்பாகவும் கருதுகின்றனர். இந்நேரத்தில் நகை விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது உயர்ந்த தங்கத்தின் விலை இன்று வரை குறையவே இல்லை.இதற்கு மத்தியில் உக்ரைன் ரஷ்யா போர், பொருளாதார மந்த நிலை, முதலீடு அதிகரிப்பு, பங்குச் சந்தை நிலவரம், ஜிஎஸ்டி வரி உயர்வு, இறக்குமதி வரி உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

இதனை அடுத்து தினந்தோறும் தங்கத்தின் விலை மாற்றமடைந்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 64 அதிகரித்துள்ளது.

ஒரு சவரன் ரூ.40,440க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.5,055க்கு விற்பனையாகி வருகிறது. அதை தொடர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் அதிகரித்து ரூ.73க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.