நகை வாங்க போவதற்கு முன் இன்றைய தங்கத்தின் விலையை தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடனேயே இருந்து கொண்டு வருகிறது. இதையடுத்து சில நாட்கள் குறைந்த அளவு சரிவதும், அடுத்த நாளே அதிரடியாக உயர்வதுமாக கனிசமாக ஏற்றத்தையே சந்தித்து கொண்டு வருகிறது

மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் எத்தனை வருடங்கள் ஆனாலும் குறைவதில்லை. இதனால் தங்க நகைகளின் விலை நிலவரங்களை தினசரி அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

மேலும், எவ்வளவு விலை ஏற்றம் ஆனாலும் திட்டமிட்டு நகை வாங்கத்தான் செய்கின்றனர். இந்த நிலையில், ஞாயிற்று கிழமையான இன்று தங்கத்தின் விலையானது நேற்றைய விலையே தான் விற்பனை செய்யப்படும்.

இதையடுத்து அதன்படி, 22 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5455 க்கும், 1 சவரன் ரூ.43640 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று, 24 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5916 க்கும், 1 சவரன் ரூ.47328 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை அடுத்து வெள்ளியானது சில்லறை விற்பனையில் 1 கிராம் ரூ.74.50 க்கும், 1 கிலோ ரூ.74500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.