இந்திய சந்தையில் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம்!

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனினை இம்மாத இறுதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த வரிசையில் தற்சமயம் இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், அதிகபட்சம் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

சர்வதேச சந்தையில் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனின் விலை 119 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 10,500 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் சார்கோல், டஸ்க் மற்றும் ஜோர்ட் நிறங்களில் கிடைக்கிறது.