3 மாத தவணை அவகாசத்தை 90 சதவீதம் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்; பேங்க் ஆப் பரோடா தகவல்

3 மாத தவணை அவகாசம் விவகாரத்தில் தகுதியானவர்களில், 90% பேர் அதனை தேர்தெடுத்துள்ளதாக பேங்க் ஆப் பரோடா தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமெடுக்க தொடங்கிய நிலையிலேயே, இந்தியாவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் மக்கள் தாங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதற்கிடையில் பலரின் கோரிக்கையே நாங்கள் வேலையிழந்து வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறோம். இதனால் வங்கிகளில் வாங்கியுள்ள கடனை தற்போது திரும்ப செலுத்த முடியாது. வங்கிகள் போதிய அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

பலர் அத்தியாவசிய தேவைகளுக்கே கஷ்டப்படும் நிலையில், இஎம்ஐ எங்கிருந்து செலுத்துவது என கேள்வியெழுப்பினர். மேலும் இஎம்ஐ செலுத்த போதிய அவகாசம் வழங்கப்பட வேண்டும். வட்டியை தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் பல கோரிக்கைகளை முன் வைத்து வந்தனர். இதன் எதிரொலியாக, ரிசர்வ் வங்கியும் பல சலுகைகளை அறிவித்தது.

மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப ரிசர்வ் வங்கி 3 மாத தவணைக்கு வங்கிகள் அவகாசம் கொடுக்கலாம் என அனுமதி கொடுத்தது. இதற்கிடையில் தான் பல வங்கிகளும் அனுமதி கொடுத்து வந்தன.

இந்த நிலையில் பேங்க் ஆப் பரோடா வெளியிட்டுள்ள அறிக்கையில், 3 மாத தவணை அவகாசம் விவகாரத்தில் தகுதியானவர்களில், 90% பேர் அதனை தேர்தெடுத்துள்ளதாக அவ்வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவ் சதா தெரிவித்துள்ளார்.

கேர் மதிப்பீட்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பேசிய சதா, எங்களின் வாடிக்கையாளர்களில் 90% பேர் இந்த அவகாசத்தினால் பயன் அடைந்துள்ளனர். இது தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது அதிகம். எப்படி இருப்பினும் பேங்க் ஆப் பரோடா மட்டும் அல்ல பல வங்கி வாடிக்கையாளர்களும், இந்த கால அவகாசத்தினால் நிச்சயம் பயன் அடைந்துள்ளனர் என்றே கூறலாம்.