சமையல் சிலிண்டர் மானிய தொகையை உயர்த்தியது அரசு


சென்னை: இந்தியாவில் மக்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பது சிலிண்டர் விலை தான். பெட்ரோல், டீசல் விலைக்கு போட்டியாக சிலிண்டர் விலையும் கிடுகிடுவென அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் மக்களுக்கு சிலிண்டர் விலையில் ரூ.300 தள்ளுபடி செய்து குறைந்த விலையில் சிலிண்டர் வாங்குவது எப்படி என்று விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள சிலிண்டர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.


ஆனால் சாமீபத்தில் அரசு சிலிண்டர் விலையை ரூ.200 குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. மேலும் அது போக ரூ.100 மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. அதனால் சிலிண்டர் விலையில் ரூ.300 குறைந்துள்ளது. எனவே நீங்கள் ரூ.640க்கு சிலிண்டர் வாங்கலாம்.

எனவே இந்த வாய்ப்பை தவறவிடாமல் மக்கள் பயன்படுத்தலாம். விரைவில் தேர்தல் வர இருப்பதால் மானிய தொகை மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.