ஒரே நாளில் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு

சென்னை: முகூர்த்த நாளை முன்னிட்டு தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.120 அதிகரித்து சவரனுக்கு ரூ.44,480க்கு விற்பனை ...இந்தியாவில் உள்நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பணவீக்கத்தைப் பொறுத்து தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த வாரம் முழுவதுமே ஓணம் பண்டிகையொட்டி தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

அந்த வகையில், நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,015 க்கும், சவரனுக்கு ரூ. 48,120க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,545 க்கும், சவரனுக்கு ரூ. 44,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து, தற்போது முகூர்த்த நாளை தொடர்ந்து தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதாவது, 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.6,030க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்துரூ.48,240க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்துரூ.5,560 க்கும், சவரனுக்கு ரூ. 120 உயர்ந்துரூ.44,480க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேற்று வெளியின் விலை கிராமுக்கு ரூ. 80க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.